உள்ளூர் செய்திகள்

அரசு கன்னட பள்ளிக்கு புதிய கட்டடம் திறப்பு

தங்கவயல்: கேசம்பள்ளி அருகே பளவனஹள்ளியில் அரசு கன்னட ஆரம்ப நடுநிலைப் பள்ளியின் புதிய கட்டடம் திறக்கப்பட்டது.கேசம் பள்ளி அருகே பளவன ஹள்ளி கிராமத்தில் பழமையான அரசு கன்னடப்பள்ளி கட்டடம் சிதிலம் அடைந்திருந்தது. இதனை புதுப்பிக்க வேண்டும் என்று கிராம மக்கள், பள்ளி ஆசிரியர்கள் பலரும் கோரி வந்தனர். இப்பள்ளியை பார்வையிட்ட தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா, பள்ளி கட்டடத்தை புதுப்பிப்பதாக உறுதி அளித்திருந்தார்.அதன்படி, பள்ளியின் மூன்று வகுப்பு அறைகள், சமையல் அறை, அலுவலகம், நுழைவு வாயில் ஆகியவை 61 லட்சம் ரூபாய் நிதியில் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.புதிய கட்டடத்தை திறந்து வைத்து ரூபகலா பேசுகையில், இப்பள்ளியில் பளவனஹள்ளி கிராமத்தை சேர்ந்தோர் மட்டுமின்றி, கேசம்பள்ளி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களின் சிறுவர்கள் கல்வி கற்க வருகின்றனர். கர்நாடக மாநில வரலாற்றில் கேசம்பள்ளி முக்கியத்துவமான இடமாகும்.இங்கு பிறந்து வாழ்ந்தவர் தான் கர்நாடக முதன் முதல்வர் கே.சி.ரெட்டி. சிறந்த கல்வியாளர்; சுதந்திர போராட்ட தியாகி; மாநில முதல்வர்; மத்திய அமைச்சர் என பல உயர் பதவிகளை வகித்தவர். அவர் வாழ்ந்த இப்பகுதி எல்லா புகழும் பெற வேண்டும். வீடுதோறும் கல்வியாளர்கள் உருவாக வேண்டும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், என்றார்.விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள், கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்