உள்ளூர் செய்திகள்

மத்திய பல்கலை பட்டமளிப்பு விழா ஜனாதிபதி பங்கேற்பு

சென்னை: திருவாரூர் மாவட்டம், நீலக்குடியில், மத்திய பல்கலை இயங்குகிறது. இந்த பல்கலையின், 10வது பட்டமளிப்பு விழா, வரும் செப்டம்பர் 3ம் தேதி நடக்கிறது.இதில், சிறப்பு விருந்தினராக, ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார். 900க்கும் அதிகமான மாணவ - மாணவியருக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு பட்டங்கள் வழங்குகிறார்.கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த, மத்திய பல்கலையின் 9வது பட்டமளிப்பு விழாவில், திரவுபதி முர்மு பங்கேற்பதாக இருந் தது. ஆனால், மோசமான வானிலை காரணமாக பயணம் ரத்து செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்