உள்ளூர் செய்திகள்

காவேரி மருத்துவமனையில் நரம்பியல் சிறப்பு பிரிவுகள் தொடக்கம்!

சென்னை: சென்னை ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனை, நரம்பியல் மற்றும் மூளை-முதுகெலும்பு அறுவை சிகிச்சைக்கான சிறப்பு கிளினிக்குகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பக்கவாத சிகிச்சை சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.காவேரி பிரெயின் & ஸ்பைன் இன்ஸ்டிட்யூட் (கிப்ஸ்) மூலமாக தொடங்கப்பட்டுள்ள இந்த சேவையில், நரம்பியல் நிபுணர்கள், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், உளவியலாளர்கள், உடலியக்க சிகிச்சை நிபுணர்கள் உள்ளிட்டோர் ஒருங்கிணைந்து சேவை வழங்க உள்ளனர். எபிலப்ஸி, பார்கின்சன்ஸ், தலைவலி, முக நரம்பு வலி, முதுகெலும்பு வளைவு போன்ற பிரச்சினைகளுக்கான தனிப்பட்ட சிகிச்சை இங்கு வழங்கப்படும்.பக்கவாத சிகிச்சையில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நோயாளிகள் 'பொன்னான ஒரு மணி நேரத்தில்' சிகிச்சை பெறும் வாய்ப்பு அதிகரித்து, உயிர் காப்பதோடு, ஊனமின்றி குணமடையும் சாத்தியமும் அதிகரிக்கிறது.மேம்பட்ட எம்ஆர்ஐ, சிடி, இஇஜி, குறைந்த வெட்டுத் தொழில்நுட்ப அறுவைச் சிகிச்சை வசதிகளுடன், மூளை எண்டோஸ்கோபிக் அறுவைச் சிகிச்சை, முதுகெலும்பு குறைந்த ஊடுருவல் சிகிச்சை, டீப் பிரெயின் ஸ்டிமுலேஷன், மருந்து எதிர்ப்பு எபிலப்ஸி சிகிச்சை உள்ளிட்ட உலகத் தர சிகிச்சைகளும் இங்கு செய்யப்பட உள்ளன.“சமூகத்தில் அதிகம் காணப்படும் நரம்பியல் பிரச்சினைகளுக்கு உலகத் தரத்தில் தீர்வு அளிக்கவே இந்த சிறப்பு கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. தொழில்நுட்பம், குழு ஒருங்கிணைப்பு மற்றும் கருணையுள்ள பராமரிப்பு ஆகியவை இணைந்து, ஒவ்வொரு நோயாளிக்கும் தனிப்பட்ட சிகிச்சையை வழங்குவதே எங்கள் நோக்கம்,” என்று காவேரி பிரெயின் & ஸ்பைன் இன்ஸ்டிட்யூட் இயக்குநர் டாக்டர் கே. ஸ்ரீதர் தெரிவித்தார்.காவேரி மருத்துவமனை, ரேடியல் சாலையில் 24/7 பக்கவாத மற்றும் நரம்பியல் அவசர சிகிச்சை, இயல்பு மீட்பு, உடலியக்க சிகிச்சை, பேச்சு & மொழி சிகிச்சை, உளவியல் ஆலோசனை உள்ளிட்ட முழுமையான நரம்பியல் பராமரிப்பு சேவைகள் வழங்கப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்