உள்ளூர் செய்திகள்

அடுத்த தலைமுறையினர் தமிழ் கற்க முடியாத சூழல்

சென்னை: முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுதிய 85,000 பேர், தமிழ் மொழி தேர்வில் தோல்வி அடைந்திருப்பது வேதனைக்குரியது என தமிழக பா.ஜ., தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயண திருப்பதி கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழை வளர்க்க, மத்திய அரசு என்ன செய்தது என, துணை முதல்வர் உதயநிதி கேட்கிறார். ஆனால், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுதிய 85,000 பேர், தமிழ் மொழி தேர்வில் தோல்வி அடைந்திருப்பது, தி .மு.க., ஆட்சியின் அலங்கோலத்தை காட்டுகிறது. தமிழை காட்டுமிராண்டி மொழி என குறிப்பிட்ட ஈ.வெ.ராமசாமியை வழிகாட்டியாக மார்தட்டிக் கொள்வோர், தமிழை வளர்ப்பது குறித்து எப்படி சிந்திப்பர்?தமிழன் என்று சொல்வதை விட, திராவிடன் என்று சொல்வதையே பெருமையாக கொள்ளும் திராவிட மாடல் அரசியல்வாதிகளின் தமிழ் துரோகம், வெளிச்சத்திற்கு வந்துள்ளது.ஆங்கிலத்தை புகுத்துவதன் வழியே, அடுத்த தலைமுறையினர் தமிழே கற் க முடியாத சூழ்நிலையை உருவாக்கி, தமிழை அழித்துவிட தி.மு.க., திட்டம் போட்டு பணியாற்றுகிறது.இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்