உள்ளூர் செய்திகள்

ஓட்ட முடியாத சைக்கிள்களை உருட்டிச் சென்ற மாணவிகள்

அலங்காநல்லுரர்: அலங்காநல்லுார் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் விலையில்லா சைக்கிள்களை மாணவிகள் ஓட்டிச் செல்ல முடியாமல் 7 கி.மீ., உருட்டிச் சென்று அவதிப்பட்டனர்.இப்பள்ளியில் பிளஸ் 1 மாணவிகள் 234 பேருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது. இங்கு வலசை, அய்யூர் பெரிய ஊர்சேரி, தேவசேரி, அ.கோவில்பட்டி உட்பட சுற்றுவட்டார கிராமப்புற மாணவிகள் படிக்கின்றனர்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா துவங்கி வைத்த இத்திட்டத்தில் வழங்கிய சைக்கிள்கள் பள்ளிக்கு மட்டுமின்றி, விவசாய தேவைக்கும் உதவியாக இருந்தது. சில ஆண்டுகளாக வழங்கப்படும் சைக்கிள் பயன்படுத்த, விற்க கூட முடியாமல் வீடுகளில் காட்சிப் பொருளாக உள்ளது. இங்கு படிக்கும் கிராம மாணவிகள் 7 கி.மீ., வரை சைக்கிளை ஓட்ட முடியாமல் உருட்டிச் சென்றனர்.மாணவிகள் கூறுகையில், “சைக்கிள் டயர்களில் காற்று நிற்கவில்லை. மெயின் ரோட்டில் ஓட்ட அச்சமாக உள்ளது. சக்கரங்கள் உரசுவதால் உருட்டவும் சிரமமாக உள்ளது,” என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்