உள்ளூர் செய்திகள்

இந்துஸ்தான், கே.பி.ஆர்., அணிகள் கல்லுாரி கூடைப்பந்தில் சாம்பியன்

சென்னை: கல்லுாரிகளுக்கு இடையிலான வர்கீஸ் நினைவு கூடைப்பந்தில், ஆண்களில் இந்துஸ்தான், பெண்களில் கோவை கே.பி.ஆர்., கல்லுாரிகள் முதலிடங்களை கைப்பற்றின.இந்துஸ்தான் பல்கலை சார்பில், நிறுவனர் கே.சி.ஜி., வர்கீஸ் நினைவு கோப்பைக்கான கூடைப்பந்து போட்டி, படூரில் உள்ள பல்கலை வளாகத்தில் நடந்தது. ஆண்களில் 12 அணிகள், பெண்களில் எட்டு அணிகள் பலப்பரீட்சை நடத்தின.ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் இந்துஸ்தான் அணி - செயின்ட் ஜோசப் பல்கலை அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான ஆட்டத்தில், 83 - 76 என்ற கணக்கில் இந்துஸ்தான் அணி வெற்றி பெற்று, கோப்பையை கைப்பற்றியது. மூன்றாம் இடம் எஸ்.ஆர்.எம்., பல்கலை அணிக்கும், நான்காம் இடம் இந்துஸ்தான் 'பி' அணிக்கும் சென்றது.பெண்களுக்கான இறுதிப் போட்டியில், கோவை கே.பி.ஆர்., கல்லுாரி அணி - வேல்ஸ் பல்கலை அணியை எதிர்த்து கடும் போட்டி கொடுத்தது. கடைசி நிமிடங்கள் வரை பதற்றம் நீடித்த நிலையில், 60 - 57 என்ற கணக்கில் கே.பி.ஆர்., அணி வெற்றி பெற்று, முதலிடத்தை தட்டிச் சென்றது.மூன்றாம் இடத்தை சென்னை பல்கலை அணியும், நான்காம் இடத்தை இந்துஸ்தான் பல்கலையும் பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்