உள்ளூர் செய்திகள்

தேசிய கல்வி நிறுவன தர வரிசையில் ரத்தினம்

கோவை: ரத்தினம் கலை அறிவியல் கல்லுாரி, 'பார்ச்யூன் 100' தேசிய கல்வி நிறுவன தரவரிசை 2026ல், 19வது இடத்தைப் பெற்று, சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளது.தாய்லாந்தின் பாங்காக் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற, நிலையான எதிர்காலத்திற்கான கல்வி குறித்த உலகளாவிய மாநாட்டில் தரவரிசை வெளியிடப்பட்டது.ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு, பார்ச்யூன் 100 கல்வி நிறுவனங்களில் ஒன்றாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.பூடான் அரசின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் லியோன்போ யீசாங் டே தாப்பா, ஆஸ்திரேலிய துாதரக அமைச்சர் ஆண்ட்ரூ ஈகன், பெல்ஜியம் நாட்டின் துாதர் மிசேல் பாரிஸ், இந்தியாவின் ஐ.நா., பிரதிநிதி தட்சணாமூர்த்தி உள்ளிட்ட சர்வதேச தலைவர்கள் முன்னிலையில் விருது வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்