உள்ளூர் செய்திகள்

ராணுவத்தில் ஆள் சேர்ப்பு முகாம்: விண்ணப்பிக்க அழைப்பு

கிருஷ்ணகிரி: ராணுவத்தில் ஆள்சேர்ப்பு முகாமிற்கு தகுதியும், விருப்பமும் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள், இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட கலெக்டர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கோயம்புத்தூர் ராணுவ ஆள் சேர்ப்பு அலுவலகம் மூலம் நடைபெறும் முகாமிற்கு தகுதியும், விருப்பமும் உள்ள இளைஞர்கள், ஏப்., 1 வரை www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், ஈரோடு, தேனி, நீலகிரி, மதுரை, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தர்மபுரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பங்கு பெறலாம். மேலும், விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு, 18 முதல் 22 வரையிலும், கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு தேர்வு முதல் பிளஸ் 2 மற்றும் தொழிற்கல்வி உள்ளிட்டவையாகும். விருப்பமுள்ள இளைஞர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்