க்யூ.எஸ்., உலக தரவரிசை வேளாண் பல்கலை அசத்தல்
கோவை: க்யூ.எஸ்., உலக பல்கலை தரவரிசைப் பட்டியலில், தமிழ்நாடு வேளாண் பல்கலை அபார முன்னேற்றம் கண்டுள்ளது.பிரிட்டனைச் சேர்ந்த க்யூ.எஸ்., உயர்கல்வி ஆய்வு நிறுவனம், கல்லூரிகள், பல்கலைகளை ஒப்பீட்டளவில் தரவரிசைப்படுத்துகிறது. கடந்த 2011 முதல், வேளாண்மை மற்றும் வனவியல் என துறை சார் வரிசைகள் விரிவு செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டுக்கான தர வரிசையில், 6,273 நிறுவனங்கள் பங்கேற்றன. இவற்றில், 1,908 நிறுவனங்கள் 55 கல்வித் துறைகளில் தர வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.தமிழ்நாடு வேளாண் பல்கலை கடந்த 2023ம் ஆண்டு, வேளாண்மை மற்றும் வனவியல் பிரிவில் 401 - 420 என்ற வரிசையில் இருந்தது. நடப்பாண்டு, 201 - 250 என்ற வரிசைக்கு உயர்ந்துள்ளது. உலக அளவில் தரவரிசைப் பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளமைக்கு, அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பாக செயல்பட்ட பேராசிரியர்கள் பணியாளர்களே காரணம் எனக் கூறி, துணைவேந்தர் (பொ) சுப்பிரமணியன் பாராட்டு தெரிவித்துள்ளார்.