அனுபவ அடிப்படை கற்றலை வளர்க்க புரிந்துணர்வு ஒப்பந்தம்
கோவை: ரத்தினம் கல்வி நிறுவனங்கள் மற்றும் கோவை மண்டல அறிவியல் மையம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.ரத்தினம் கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி மாணிக்கம் மற்றும் மண்டல அறிவியல் மையத்தின் புதுமை மைய வழிகாட்டி லெனின் பாரதி புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர்.ஒப்பந்தத்தின்படி, பயிற்சி திட்டங்கள், கருத்தரங்குகள், அறிவியல் கண்காட்சிகள் மற்றும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.மாணவர்கள் நேரடி அறிவியல் பயன்பாடுகள் மற்றும் புதுமை சார்ந்த கற்றலில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதே இதன் நோக்கம் என, ரத்தினம் கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி மாணிக்கம் தெரிவித்தார்.கல்லூரியின் முதன்மை வணிக அதிகாரி நாகராஜ் மற்றும் பேராசிரியர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.