வேலை வாய்ப்பு முகாம் பணி ஆணை வழங்கல்
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழக மேலாண்மை ஆய்வுத் துறை சார்பில், நடந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்ற எம்.பி.ஏ., மாணவர்களுக்கு பணி நியமன ஆணையை துணைவேந்தர் பிரகாஷ் பாபு வழங்கினார்.புதுச்சேரி பல்கலைக்கழகம் உயர்கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை ஆகிய துறைகளில் சிறந்து விளங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மேலாண்மைப் பள்ளியின் மேலாண்மை ஆய்வுத் துறை, தொழில்துறை கூட்டாண்மை மற்றும் விரிவான பயிற்சித் திட்டங்களின் மூலம், எம்.பி.ஏ., மாணவர்களுக்கான வளாக வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.முகாமில், 25க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று மாணவர்களை தேர்வு செய்தன. அதில், தேர்வான எம்.பி.ஏ., மாணவர்களுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, துணைவேந்தர் பிரகாஷ் பாபு தலைமை தாங்கி, மாணவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார். தொடர்ந்து, மாணவர்களின் உழைப்பையும், சாதனையையும் பாராட்டி பேசினார்.மேலாண்மைப் பள்ளியின் டீன் நடராஜன், துறைத் தலைவர் வெங்கடேஷ்குமார் மற்றும் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் சினோவாசனே உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்தாண்டு நடந்த வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானர்களுக்கு ஆண்டிற்கு ரூ. 4.5 முதல் 15 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது.