உள்ளூர் செய்திகள்

தொலைதூரக் கல்வி சேர்க்கை வேளாண் பல்கலை அழைப்பு

கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலையில், தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.வேளாண் பல்கலை, திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம் வாயிலாக, வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்களில் வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு, சான்றிதழ் பாடங்கள், ஆன்லைன் சான்றிதழ் பாடங்களை நடத்தி வருகிறது.இதனைத் தொடர்ந்து, 2026 - 2027ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்பு முடித்தவர்கள் உரம் மற்றும் பூச்சி மருந்துக்கடை துவங்க உரிமம் பெறலாம்.இதரப் பட்டயப் படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்பு படித்தவர்கள் தோட்டக்கலை நாற்றங்கால், பண்ணை இயந்திரக் கருவிகள், காளான் வளர்ப்பு, உயிர் உரங்கள் உற்பத்தி, உயிரியல் முறை பூச்சி மற்றும் நோய்க் கட்டுப்பாடு, ஒருங்கிணைந்த பண்ணையம், வேளாண் பொருட்கள் மதிப்புக் கூட்டல் மற்றும் தரமான விதை உற்பத்தி தொடர்பான சுயதொழில் தொடங்கலாம்.வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்பு மற்றும் பட்டயப் படிப்பிற்கான பயிற்சி வகுப்புகள் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்தப்படுகிறது.மேலும் விவரங்களுக்கு 94421 11048; 94890 51046 ஆகிய எண்களிலோ, odl@tnau.ac.in என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம் என, பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்