ரூபாய் மதிப்பு சரிவு: நாடாளுமன்ற குழு கவலை
புதுடில்லி: இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, தனியார் முதலீடுகளின் மந்தநிலை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலை தெரிவித்த நிலையில், நாட்டின் பொருளாதாரம் வலுவாக உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.நிதி விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவர் பார்த்ருஹரி மஹ்தாப் தலைமையில் நிதிக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உறுப்பினர்கள், ரூபாய் மதிப்பு சரிவு, பணவீக்கம், மேற்காசிய போர், இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம், சீனா தனது தொழில்துறையை பாதுகாக்க கொண்டு வந்துள்ள புதிய கட்டுப்பாடுகள் குறித்தும் கவலையுடன் கேள்வி எழுப்பினர்.அதற்கு பதில் அளித்த பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் அனுராதா தாக்கூர், அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் ஆகியோர், பல்வேறு சவால்கள் இருந்தபோதிலும், இந்திய பொருளாதாரம் வலுவான நிலையை நோக்கி முன்னேறி வருவதாகவும் இந்தியா மிகப்பெரிய சந்தை என்பதால் சவால்களை சமாளிக்க முடியும் என்றும் தெரிவித்தனர்.