உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளியில் இலவச பாடப் புத்தகம் வழங்கல்

புதுச்சேரி: திலாசுப்பேட்டை அரசு ஆண்கள் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான இலவச பாடப் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் சுப்ரமணியன் தலைமை தாங்கி, 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்களை வழங்கினார். தொடர்ந்து, இந்த கல்வியாண்டில் ஒவ்வொரு மாணவரும் கல்வியில் மட்டுமல்லாமல் ஒழுக்கம், தூய்மை மற்றும் நற்பண்புகளில் சிறந்து விளங்க வேண்டும் என, அறிவுறுத்தினார்.முன்னதாக, ஆசிரியர் ஜெயந்தி வரவேற்றார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர். ஆசிரியர் ஜெயப்பிரகாஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்