உள்ளூர் செய்திகள்

விழுப்புரம் அரசு கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

விழுப்புரம்: விழுப்புரம் சாலாமேடு டாக்டர் எம்.ஜி.ஆர்., அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 2026 - 27ம் ஆண்டிற்கான மாணவிகள் சேர்க்கை கலந்தாய்வு நேற்று துவங்கியது.முதல் நாளான நேற்று தமிழ் பாடப்பிரிவு சுழற்சி 1 மற்றும் 2 ஆகியவற்றிற்கு கலந்தாய்வு நடந்தது. இதற்காக அழைப்பு விடுக்கப்பட்டிருந்த மாணவிகள் சேர்க்கை கட்டணம் மற்றும் பொதுத்தேர்வுகளின் மதிப்பெண் பட்டியல் அசல், நகல், பள்ளி மாற்று சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் கலந்து கொண்டனர்.மாணவிகளின் சான்றிதழ்களை கல்லுாரி முதல்வர் தாமரைக்கண்ணன் தலைமையிலான குழுவினர் சரிபார்த்தனர்.இதேபோன்று, விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அண்ணா அரசு கலைக்கல்லுாரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடந்தது. முதல் நாளான நேற்று காலை 09:30 மணிக்கு பி.எஸ்.சி., பி.சி.ஏ., அறிவியல் பிரிவு சுழற்சி 1 (கட்-ஆப் மதிப்பெண் 400 முதல் 340 வரை) மற்றும் காலை 11:30 மணிக்கு சுழற்சி 2க்கு கலந்தாய்வு நடந்தது. கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) கனகசபாபதி தலைமையிலான குழுவினர் மாணவர்களின் ஆவணங்களை சரிபார்த்து அட்மிஷன் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்