உள்ளூர் செய்திகள்

பி.எஸ்.சி., நர்சிங் நுழைவு தேர்வு ஜூலைக்கு ஒத்திவைப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் பி.எஸ்.சி., நர்சிங் தேர்வு அடுத்த மாதம் 5ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் செவ்வேள் செய்திக்குறிப்பு:புதுச்சேரியில் பி.எஸ்.சி., நர்சிங் படிப்புக்கான நுழைவுத்தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளில் இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் மறுததேர்வு வரும் 21ம் தேதி நடைபெறுவதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. இதன் காரணமாக பி.எஸ்.சி., நர்சிங் படிப்புக்கான நுழைவுத்தேர்வு வரும் ஜூலை 5ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்