உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அரசு ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை துவக்கம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, கட்டுமான பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சார்புடையவர்கள் திறன் பெற்று வேலைவாய்ப்பு பெறும் வகையில், கிருஷ்ணகிரி அரசு ஐ.டி.ஐ., துவங்கப்பட்டுள்ளது.இதில், ஆறு தொழிற்பிரிவுகளில் கலந்தாய்வு முடிந்து காலியாக உள்ள இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதியுடையவர்கள் சேர்ந்து பயன்பெறும் விதமாக, மேனுபேக்சரிங் பிராசஸ் கன்ட்ரோல், ஆட்டோமேசன், இன்-பிளன்ட் லாஜிஸ்டிக் அசிஸ்டன்ட் ஆகிய ஓராண்டுகால பயிற்சி பிரிவுகள் உள்ளன.மெக்கானிக் எலக்ட்ரிக் வெகிக்கள், டெக்னீசியன் மெக்கட்ரானிக்ஸ், சிவில் இன்ஜினியரிங் அசிஸ்டன்ட் ஆகிய இரண்டு ஆண்டு கால பயிற்சி பிரிவுகள், எட்டாம் வகுப்பு கல்வித் தகுதி உடையவர்களுக்கு ஒயர்மேன் எனும் இரண்டு ஆண்டுகால பயிற்சி பிரிவும் உள்ளன.பயிற்சிக்கு கட்டணம் இல்லை. பயிற்சி பெரும் மாணவ, மாணவியருக்கு, 750 ரூபாய் உதவித்தொகை, அரசுப் பள்ளிகளில் பயின்றிருந்தால், புதுமைப்பெண், தமிழ்புதல்வன் திட்டத்தில், 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. பாடபுத்தகம், வரைபட கருவிகள், இலவச பஸ் பாஸ், மடிக்கணினியும் வழங்கப்படும்.மாணவர்கள், 117 ஈடன் கார்டன் வளாகம், சேலம் தேசிய நெடுஞ்சாலை, அவதானப்பட்டி (சிறுவர் பூங்கா அருகில்), கிருஷ்ணகிரி எனும் முகவரியில் நேரடியாகவோ, 9443081454, 9789681995, 9787970227, 9626175135 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்