உள்ளூர் செய்திகள்

தனியார் துறை வேலைவாய்ப்பு தர்மபுரியில் இன்று முகாம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட கலெக்டர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியார் துறை நிறுவனங்கள் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் மாதந்தோறும் நடக்கிறது. இதன் மூலம், தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை நேரடியாக தேர்வு செய்து வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றனர். இந்த தனியார் துறை வேலை வாய்ப்புகளால், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செய்துள்ள பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. இம்முகாமில், பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு விற்பனையாளர், மேலாளர், கண்காணிப்பாளர் கணினி இயக்குபவர், கணக்காளர், மெக்கானிக் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பள்ளி படிப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு என பல்வேறு கல்வி தகுதிக்கும் ஏற்ற வகையில் பணிகள் வழங்கப்படும் என, தனியார் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.எனவே, தனியார் துறையில் பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் இன்று ஜூன், 19ம் தேதி வெள்ளிக்கிழமை காலை, 10:00 மணிக்கு, தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடக்கவுள்ள வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்