உள்ளூர் செய்திகள்

துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணனுடன் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திப்பு

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பிரகாஷ் பாபு நேற்று புதுடில்லியில் துணைக் ஜனாதிபதியும், புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ராதாகிருஷ்ணனை சந்தித்து மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடினார்.சந்திப்பின் போது, புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் தற்போதைய கல்வி, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி சார்ந்த செயல்பாடுகள் குறித்து துணை ஜனாதிபதியிடம் புதுவை பல்கலைக்கழகத்தின் வேந்தர் பிரகாஷ்பாபு விளக்கமளித்தார்.மேலும், பல்கலைக்கழகத்தின் அடுத்த பட்டமளிப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் மற்றும் திட்டங்கள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின் விரிவாக்கத் திட்டங்கள், மாணவர்களை மையமாகக் கொண்ட புதுமையான மற்றும் வேலைவாய்ப்பு நோக்கமுடைய கல்வித் திட்டங்களை அறிமுகப்படுத்துதல், ஆராய்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகள் குறித்தும் கருத்துப் பரிமாற்றம் நடந்தது.உயர்கல்வித் துறையில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்பையும் பங்களிப்பையும் மேலும் வலுப்படுத்தும் வகையிலான ஆக்கப்பூர்வமான முயற்சிகள் குறித்தும் இருவரும் கலந்துரையாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்