டெட் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்: ஆசிரியர்கள் கோரிக்கை
சென்னை: தமிழக பட்டதாரி ஆசிரியர் கூட்டணி செயலர் செல்லய்யா வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தங்களின் பணியை தொடர்வதை உறுதி செய்யும் வகையில் நடத்தப்பட்ட, 'டெட்' எனும் தகுதித் தேர்வில், 35 சதவீத மதிப்பெண்ணை, தேர்ச்சி சதவீதமாக அறிவிக்க வேண்டும்.ஏனெனில், இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வில், ஐந்தாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்காமல், 10ம் வகுப்பு வரையிலான பாடங்களில் இருந்து கேள்விகள் இடம் பெற்றன. மேலும், 75 சதவீத கேள்விகள், நேரடியாக விடையளிக்கும் வகையில் அமைக்கப்படவில்லை. அதனால், இந்த தேர்வு மிகவும் கடினமாக இருந்தது. எனவே, தேர்ச்சி மதிப்பெண்ணை, 35 ஆக நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.