உள்ளூர் செய்திகள்

எஸ்.டி.சீயோன் பள்ளியில் களிமண் சிற்பக்கலை போட்டி

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடி எஸ்.டி.சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் களிமண் சிற்பக்கலை போட்டி நடந்தது.விநாயகர் சதுர்த்தியையொட்டி நடந்த இப்போட்டியில், மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று களிமண்ணை கொண்டு விநாயகர் சிலை உள்ளிட்ட பல்வேறு பொம்மைகள் செய்து தங்களது படைப்பாற்றலை வெளிப்படுத்தினர்.திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களை பள்ளி தாளாளர் சுஜின், இணைதாளாளர் தீபா, தலைமை ஆசிரியர் அமலக்குமார் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்