உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் இலக்கிய போட்டி

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான இலக்கியப் போட்டிகள் நடந்தன.ராமகிருஷ்ண மிஷன் விவேகானந்தா கல்வி மற்றும் ஆராய்ச்சி மாற்றுத்திறனாளி மேலாண்மை மற்றும் சிறப்பு கல்வி நிறுவனம் இதற்கு ஏற்பாடு செய்தது. சுவாமி கரிஷ்டானந்தர் தலைமை வகித்தார். முதல்வர் முத்தையா முன்னிலை வகித்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த ராம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிறப்பு மற்றும் உள்ளடங்கிய பள்ளிகளை சேர்ந்த, 149 சிறப்பு கல்வித்திறன் மாணவ, மாணவியர் போட்டிகளில் பங்கேற்றனர்.பார்வை திறன் குறைபாடு உடையவர்களுக்கான பேச்சுப் போட்டியும், செவித்திறன் குறைபாடு உடையவர்களுக்கான சைகை மொழி மற்றும் ஓவிய போட்டியும், அறிவுசார் குறைபாடு உடையவர்களுக்கான ஓவியம் மற்றும் வண்ணம் தீட்டும் போட்டியும் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்