உள்ளூர் செய்திகள்

மத்திய பல்கலைகள் தொடர்பான இறுதி அறிக்கை சமர்ப்பணம்

நாட்டிலுள்ள அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே பொது சேர்க்கை செயல்பாட்டை ஏற்படுத்துவது சம்பந்தமான இறுதி அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் பொது நுழைவுத் தேர்வை நடத்துவது சம்பந்தமாக ஆய்வுசெய்ய பல்கலைக்கழக துணைவேந்தர்கள் அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவானது தனது இறுதி அறிக்கை மற்றும் புளூ பிரின்டை மத்திய மனிதவள அமைச்சரிடம் தற்போது சமர்பித்துள்ளது. இந்த அறிக்கை மற்றும் புளூ பிரின்ட் பற்றி நாட்டிலுள்ள 200 மத்திய மற்றும் மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கூடி விவாதிப்பார்கள். மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை, எம்.பில் மற்றும் பி.எச்டி. படிப்புகளுக்கு ஒரே நுழைவுத்தேர்வு நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்