யு.பி.எஸ்.சி. நடத்தும் ஸ்பெஷல் கிளாஸ் ரயில்வே தேர்வு
இந்த வருடத்திற்கான(2011) ஸ்பெஷல் கிளாஸ் ரயில்வே அப்ரென்டிசஸ் தேர்வை, வரும் ஜூலை 31 ம் தேதி யு.பி.எஸ்.சி. நடத்துகிறது. இந்திய ரயில்வேயின் மெக்கானிக்கல் துறையில் ஸ்பெஷல் கிளாஸ் அப்ரென்டிசஸ் பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறான மையங்களில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு www.upsconline.nic.in என்ற இணைப்பை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்புவதற்கான விரிவான விவரங்கள் வலைதளத்தில் கிடைக்கின்றன. வரும் ஏப்ரல் 25, இரவு 12 மணிக்குள் ஆன்லைன் விண்ணப்பங்கள் நிரப்பப்பட்டுவிட வேண்டும். எனவே அனைத்து ஆன்லைன் விண்ணப்பதாரர்களும், கடைசி தேதி வரை காத்திராமல், முதலிலேயே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சாதாரண முறையில் விண்ணப்பம் செய்பவர்கள், அதற்கான விண்ணப்பங்களை நாடு முழுவதிலுமுள்ள தலைமை தபால் நிலையங்களில் கிடைக்கும். சாதாரண முறையில் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்ப வேண்டிய கடைசி தேதி ஏப்ரல் 25. அதேசமயம் வெளிநாடு மற்றும் நாட்டின் ஒதுக்குப்புறமான பகுதிகளில் வசிக்கும் நபர்கள் தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்பும் கடைசி தேதி மே 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான விவரங்களை தெரிந்துகொள்ள யு.பி.எஸ்.சி -இன் அதிகாரப்பூர்வ வலைதளத்தை அணுகவும்.