மதுரை மண்டல விளையாட்டு போட்டிகள் பிப்., 13ல் துவக்கம்
தேனி: மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் மதுரையில் பிப்., 13 ல் துவங்குகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மதுரை மண்டலத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் உள்ளன. சில மாதங்களுக்கு முன் முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான குழு போட்டிகள் நடந்தது. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு மண்டல அளவிலான போட்டிகள், மதுரையிலுள்ள விளையாட்டரங்கில் பிப்.,13 ல் துவங்கி 15 வரை நடக்கிறது. கூடைப்பந்து, கையுந்துபந்து, கபாடி, நீச்சல் ஆகிய விளையாட்டு வீரர்கள், அணிகள் பிப்.,13, இறகுபந்து, டேபிள்டென்னிஸ், டென்னிஸ், தடகளம் ஆகிய விளையாட்டு வீரர்கள் பிப்.,14 அன்று காலை 7 மணிக்கு ஆஜராக வேண்டும். இதே போல் மண்டல அளவிலான கால்பந்து போட்டிகள் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலை மைதானத்தில் பிப்., 20 முதல் 22 வரையும், ஹாக்கி போட்டிகள் பிப்.,21 முதல் 23 வரை விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கிலும் நடைபெறும். மாவட்ட விளையாட்டு அலுவலர்கள் அணி வீரர்களை தயார் செய்து அனுப்ப வேண்டும் என விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மண்டல முதுநிலை மேலாளர் வாழ்வீமராஜா தெரிவித்துள்ளார்.