உள்ளூர் செய்திகள்

பி.எஸ்.சி., நர்சிங் படிப்பு கலந்தாய்வு இன்று (செப்.,19) நிறைவு

பி.எஸ்.சி., நர்சிங் பி.பார்ம்., உள்ளிட்ட மருத்துவம் சார் பட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு, இன்றுடன் நிறைவு பெறுகிறது. சுயநிதி கல்லூரிகளில் உள்ள, பி.எஸ்சி.,நர்சிங் உள்ளிட்ட மருத்துவம் சார் பட்டப் படிப்புகளுக்கு இருந்த, 4,510 இடங்களை நிரப்ப, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், சென்னை ஓமந்தூரார் அரசுக் கல்லூரியில் , 14ம் தேதியிலிருந்து நடந்து வருகிறது. நேற்று வரை, 2,460 இடங்கள் நிரம்பின; 1,690 இடங்கள் மீதம் உள்ளன. இன்றுடன் கலந்தாய்வு முடிகிறது. இன்றைய, கலந்தாய்வில் பங்கேற்க, 1,000 பேர் அழைக்கப்பட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்