உள்ளூர் செய்திகள்

கிராமங்களில் விளையாட்டு போட்டிகளை நடத்த ஊராட்சிகளுக்கு ரூ.20,000 ஒதுக்கீடு

கிராம இளைஞர்கள் விளையாட்டில் பங்குபெற, கிராம ஊராட்சி விளையாட்டு போட்டி நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஊராட்சிக்கும் ரூ.20 ஆயிரம் வீதம், ரூ.12 கோடியே 52 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு, முதலில் 6,262 ஊராட்சிகளில் நடத்தப்படவுள்ளது. தடகளம், கைப்பந்து, கபடி, கால்பந்து போட்டி நடத்த வேண்டும். ஒரு கிராமத்தில் பங்கேற்றவர் அடுத்த கிராமத்தில் பங்கேற்க கூடாது. போட்டிகளை நடத்த ஊராட்சி தலைவர், வி.ஏ.ஓ., பள்ளி தலைமை ஆசிரியர் அடங்கிய குழு நியமிக்க வேண்டும். ரூ.20 ஆயிரம் நிதியில் ரூ.4,500ஐ மாவட்ட விளையாட்டு அலுவலர் சான்றிதழ், விளையாட்டு உபகரணங்கள் ஆகியவற்றுக்கு செலவழித்து கொள்ளலாம். ஊராட்சி தலைவரிடம் ரூ.9,500 வழங்கப்பட வேண்டும். தலைமையகம் மூலம் பதக்கங்கள் வாங்க ரூ.6 ஆயிரம் செலவு போக, ஊராட்சிக்கு மானியமாக ரூ.14 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் வகையில், இரண்டு போட்டிகள் நடத்த வேண்டும். விளம்பரம், சிற்றுண்டி, பந்தல், நினைவு பரிசு ஆகியவற்றை ஸ்பான்சர் மூலம் ஊராட்சிகள் ஏற்பாடு செய்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்