உள்ளூர் செய்திகள்

முதுநிலை படிப்புக்கான நீட் தேர்வு: தமிழகத்தில் 25,000 பேர் பங்கேற்பு

சென்னை: தமிழகத்தில், 25,000 பேர் உட்பட நாடு முழுதும், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட டாக்டர்கள், முதுநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வை நேற்று எழுதினர்.நாடு முழுதும் உள்ள அரசு, தனியார் மருத்துவ கல்லுாரிகள், நிகர்நிலை பல்கலைகளில் உள்ள முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு, நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இதற்கான நீட் தேர்வை, தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் நேற்று நடத்தியது.காலை, மதியம் என இரண்டு நேரமாக நடந்த இந்த தேர்வில், எம்.பி.பி.எஸ்., முடித்த, 25,000 தமிழக டாக்டர்கள் உட்பட, நாடு முழுதும், 2 லட்சம் டாக்டர்கள் பங்கேற்றனர்.தமிழகத்தில் சென்னை, கோவை, சேலம், திருச்சி, நெல்லை நகரங்களிலும், புதுச்சேரியிலும் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன. இவற்றுக்கு தேர்வெழுத வந்த டாக்டர்கள் கடுமையாக பரிசோதிக்கப்பட்டு, தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.ஏற்கனவே, தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டது சர்ச்சையானது. பல தரப்பிலும் எதிர்ப்பு வந்ததால், மாநிலத்திற்குள்ளேயே தேர்வு மையம் மாற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்