பி.ஆர்க்., கவுன்சிலிங் தொடங்கியது - 3 நாட்கள் நடைபெறும்
காலை 9 மணிக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கான கவுன்சிலிங் தொடங்கி, 10.30 மணிவரை நடந்தது. அதன்பிறகு, இதர மாணவர்களுக்கான கவுன்சிலிங் தொடங்கி நடந்து வருகிறது. கட்-ஆப் மதிப்பெண் 310.50 என்பதிலிருந்து தொடங்குகிறது. முதல் நாள் கவுன்சிலிங், 286.60 கட்-ஆப் மதிப்பெண்கள் வரை நடைபெறுகிறது. ஜுலை 22ம் தேதி, இரண்டாம் நாளில், கட்-ஆப் மதிப்பெண் 286.60 என்பதில் தொடங்கி, 270.60 வரை நடைபெறுகிறது. ஜுலை 23ம் தேதி, மூன்றாம் நாளில், 270.60 என்ற கட்-ஆப் மதிப்பெண்ணில் தொடங்கி, 259.00 வரை நடைபெறுகிறது. இந்த 3 நாட்களுடன், முதல்கட்ட கவுன்சிலிங் நிறைவு பெறுகிறது. எஞ்சிய மாணவர்களுக்கான கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.