உள்ளூர் செய்திகள்

டைட்டன்ஸ் கார்ப்பரேட் கிரிக்கெட் இலவச கல்விக்கு ரூ.33 ஆயிரம் நிதி

கோவை: டைட்டன்ஸ் கார்ப்பரேட் கிரிக்கெட்போட்டியில், 32 அணிகள் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தின.டைட்டன்ஸ் கார்ப்பரேட் கிரிக்கெட் கோப்பை போட்டி, கடந்த நவ., இறுதியில் துவங்கியது. கோவையை சேர்ந்த, 32 கார்ப்பரேட் அணிகள் பங்கேற்றன. நாக் அவுட் முறையில், 10 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்தது. பி.எஸ்.ஜி., ஐ.எம்.எஸ்.ஆர்., மைதானத்தில், சமீபத்தில் இறுதிப்போட்டிகள் நடந்தன.முதல் அரை இறுதியில், கில்பார்க்கோ அணி, அக்சென்சர் அணியை, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அனல் பறந்த இரண்டாவது அரை இறுதி ஆட்டத்தில், கோயம்புத்துார் கார்ப்பரேட் கிரிக்கெட் கிளப் அணி, தனக்கு நிர்ணயிக்கப்பட்ட, 67 ரன்கள் இலக்கை ஒரு பந்து மீதமுள்ள நிலையில் எடுத்து, எக்ஸ்டெரோ அணியை வீழ்த்தியது.மூன்றாம் இடத்துக்கான ஆட்டத்தில் எக்ஸ்டெரோ அணி, அக்சென்சர் அணியை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வென்று, மூன்றாம் இடத்தை கைப்பற்றியது. இறுதிபோட்டியில், கில்பார்க்கோ மற்றும் கோயம்புத்துார் கார்ப்பரேட் கிரிக்கெட் கிளப் அணிகள், பலப்பரீட்சை செய்தன.டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்த, கோயம்புத்துார் கார்ப்பரேட் அணியின் பந்து வீச்சாளர்கள் அட்டகாசமான பந்துவீச்சால், கில்பார்க்கோ அணி தனது, 10 ஓவர்களின் முடிவில், 49 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.50 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய எதிர் அணி, இரு ஓவர்கள் மீதமிருக்க இலக்கை அடைந்து, முதலாம் டைட்டன்ஸ் கிரிக்கெட் கோப்பையை கைப்பற்றியது. வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன. இத்தொடரின் மூலம், டைட்டன்ஸ் கிரிக்கெட் கிளப் அணியானது, கிராமப்புற குழந்தைகளின் இலவச கல்விக்கு, ரூ.33 ஆயிரம் நன்கொடையாக வழங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்