இறையருளுடன் இனிதே தொடங்கட்டும் கல்விப் பயணம்: தினமலர் சார்பில் வித்யாரம்பம்... குட்டீஸூக்கு ஆசியும் பரிசுகளும்
வரும் விஜயதசமி நன்னாளில், மழலைச் செல்வங்களின் கல்விப் பயணத்தைத் தொடங்கி வைக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சியை, 'தினமலர்' நாளிதழ், ஸ்ரீசக்தி இன்டர்நேஷனல் பிளே ஸ்கூல் சார்பில், அவிநாசி அருகே ராக்கியாபாளையம் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் கோவிலில் வரும் 20-ம் தேதி நடத்துகின்றன. இதில், இரண்டரை வயது முதல் மூன்றரை வயது வரையிலான குழந்தைகளுக்கு முதல் எழுத்து அறிமுகம் செய்து வைக்கப்படுகிறது.ஒரு குழந்தையின் விரல் பிடித்து, அரிசியில் முதல் எழுத்தை எழுத வைக்கும் அந்த நொடி... பெற்றோரின் மனதில் ஆயிரம் கனவுகள் முளைக்கும் தருணம்! அந்தச் சின்னஞ்சிறு விரல்களுக்குள் எதிர்காலத்தின் பெரிய உலகமே அடங்கியிருக்கிறது. எழுத்தறிவின் கதவைத் திறந்து, அறிவுப் பயணத்துக்கு அடித்தளமிடும் அந்த இனிய நிகழ்வு தான் வித்யாரம்பம். வெற்றியைத் தரும் விஜயதசமி நன்னாளில், மழலைச் செல்வங்களின் கல்விப் பயணத்தை இறையருளுடனும் பெரியோரின் ஆசியுடனும் தொடங்கி வைக்க, 'தினமலர்' நாளிதழ் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.'தினமலர்' நாளிதழ், ஸ்ரீசக்தி இன்டர்நேஷனல் பிளே ஸ்கூல், ராம்ராஜ் காட்டன் நிறுவனம் மற்றும் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் கோவில் நிர்வாகம் சார்பில், வரும் 20ம் தேதி வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அவிநாசி அருகே ராக்கியாபாளையம் ஐஸ்வர்யா கார்டனில் உள்ள ஜகன்மாதா ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் கோவிலில், காலை 08:00 மணி முதல் 11:00 மணி வரை நிகழ்ச்சி நடக்கிறது. இரண்டரை வயது முதல் மூன்றரை வயது வரையிலான குழந்தைகளுக்கு, பெற்றோர் பெரியோரின் ஆசியுடன் கல்விப் பயணத்தைத் தொடங்கி வைக்கலாம்.பங்கேற்கும் சான்றோர்கள்அவிநாசி வாசீகர் மடாலயம் காமாட்சிதாச சுவாமிகள், திருப்பூர் ஸ்ரீசாரதா சத்சங்கம் ஸ்வாமினி மஹாத்மாநந்த சரஸ்வதி, ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன், ஸ்ரீசக்தி இன்டர்நேஷனல் பிளே ஸ்கூல் சேர்மன்கள் தங்கவேல், தீபன் தங்கவேல், ஹிந்து சமய அறநிலையத் துறை மண்டல இணை கமிஷனர் ஹர்சினி, 'கிளாசிக் போலோ' நிறுவன செயல் இயக்குனர் சிவராம், ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் டிரஸ்ட் நிறுவனர் ஞானகுரு, ஆடிட்டர் ராமநாதன் ஆகியோர் பங்கேற்று, குழந்தைகளுக்கு ஆசி வழங்கி வித்யாரம்பம் செய்து வைக்க உள்ளனர்.மழலைகளுக்கு பரிசுவித்யாரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்கும் குழந்தைகளுக்கு ஸ்கூல் பேக், ஸ்லேட், பென்சில், கிரையான்ஸ், ஸ்கெட்ச் பேனா உள்ளிட்ட கல்விப் பொருட்கள் வழங்கப்படும். ராம்ராஜ் காட்டன் நிறுவனம் சார்பில் குழந்தைகளுக்கான வேட்டி, சட்டை செட்டும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வெற்றித் திருநாளான விஜயதசமியில், தங்கள் குழந்தைகளின் முதல் எழுத்துப் பயணத்தைத் தொடங்க விரும்பும் பெற்றோர் முன்பதிவு செய்யலாம். குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், முழு முகவரி, மொபைல் எண் ஆகிய விவரங்களுடன் 96887 53040 என்ற எண்ணில், காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை தொடர்புகொள்ளலாம்.அரிசியில் எழுதப்படும் அந்த முதல் எழுத்து, குழந்தையின் வாழ்வில் அழியாத நினைவாக மாறும். இன்று மழலை விரல்களால் எழுதப்படும் ஓர் எழுத்து, நாளை அறிவின் வாசல்களைத் திறக்கட்டும்; பெற்றோரின் கனவுகளுக்குச் சிறகுகள் முளைக்கட்டும்! இறையருளும் பெரியோரின் ஆசியும் துணைநிற்க, ஒவ்வொரு குழந்தையின் கல்விப் பயணமும் வெற்றிப் பயணமாக மலரட்டும்!விஜயதசமியில் ஏன் வித்யாரம்பம்?விஜயதசமி, புதிய முயற்சிகளைத் தொடங்குவதற்கு உகந்த நாளாகப் பாரம்பரியமாகக் கருதப்படுகிறது. நவராத்திரியின் நிறைவில் வரும் இந்நாளில், குழந்தைகளின் கல்விப் பயணத்தைத் தொடங்குவது பல குடும்பங்களில் வழக்கமாக உள்ளது.- கல்விக் கடவுளான சரஸ்வதி தேவியை வழிபடும் மரபுடன் இந்நாள் தொடர்புடையது.- குழந்தைகளுக்கு முதல் எழுத்தைக் கற்றுக்கொடுப்பது அறிவின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.- குடும்பத்தினரும் பெரியோரும் குழந்தைகளை வாழ்த்தி, கல்வியில் சிறக்க ஆசி வழங்குகின்றனர்.- புதிய கற்றலை நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் தொடங்கும் நாளாக விஜயதசமி அமைகிறது.முதல் எழுத்து என்பது வெறும் தொடக்கம் மட்டுமல்ல; வாழ்நாள் முழுவதும் தொடரும் கற்றலுக்கான அழகான அழைப்பு!