உள்ளூர் செய்திகள்

நுாலக அடிக்கல் விழாவில் பங்கேற்க நவ., 4ல் முதல்வர் கோவை வருகை

கோவை: தமிழக முதல்வர் ஸ்டாலின், நவ., 4ல் கோவை வருகிறார். அன்றைய தினம் கருணாநிதி நுாற்றாண்டு நுாலகத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.நாமக்கல் மாவட்டத்துக்கு ஆய்வுக்கு சென்றிருந்த, முதல்வர் ஸ்டாலின், நவ., முதல் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நானே நேரில் செல்வேன் என அறிவித்திருக்கிறார். அதன்படி, முதல் பயணமாக, கோவை வருகிறார்.காந்திபுரத்தில், 300 கோடி ரூபாயில் கருணாநிதி நுாற்றாண்டு நுாலகம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. வரும், 4ம்தேதி கோவை வரும் முதல்வர் ஸ்டாலின், இந்நுாலகத்துக்கு அடிக்கல் நாட்ட திட்டமிட்டுள்ளார். எல்காட் நிறுவனத்தின் ஐ.டி., பார்க் திறந்து வைக்கவும், ஏற்பாடு நடந்து வருகின்றது.கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக, செந்தில்பாலாஜி மீண்டும் நியமிக்கப்பட்ட பின், நடத்தப்படும் முதல் அரசு விழா என்பதால், பிரமாண்டமாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்