உள்ளூர் செய்திகள்

பத்தாம் வகுப்பு தமிழ் பொதுத்தேர்வு எளிது 8,546 பேர் ஆர்வமாக பங்கேற்பு

பொள்ளாச்சி: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. முதல் நாள் தேர்வினை, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 8,546 மாணவ, மாணவியர் எழுதினர்.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பொள்ளாச்சி தெற்கு, வடக்கு, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை, சுல்தான்பேட்டை, மதுக்கரை உள்ளிட்ட ஏழு ஒன்றியங்களில் மொத்தம், 149 பள்ளிகள் உள்ளன.அதில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, மாணவர், 4,240, மாணவியர், 4,321 என மொத்தம், 8,561 பேரும், தனித்தேர்வர்களில் மாணவர்கள், 93, மாணவியர், 40 என மொத்தம், 133 பேரும் தேர்வு எழுத விண்ணப்பித்தனர்.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், தனித்தேர்வர் எழுதும் மையம் உள்பட மொத்தம், 51 மையங்களில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. முதல் நாளான நேற்று தேர்வினை, 4,147, மாணவியர், 4,281 என மொத்தம், 8,428 பேர் தேர்வெழுதினர். மாணவர்கள், 93, மாணவியர், 40 என மொத்தம், 133 பேர் 'ஆப்சென்ட்' ஆனார்கள்.தனித்தேர்வர்களில், 81 மாணவர்கள், 37 மாணவியர் என மொத்தம், 118 பேர் தேர்வெழுதினர்; 12 மாணவர்கள், 3 மாணவியர் என மொத்தம், 15 பேர் தேர்வு எழுதவில்லை.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள தேர்வு மையங்களை மாவட்ட கல்வி அலுவலர் மணிமாலா ஆய்வு செய்தார். அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும், 6ம் தேதி வரை நடக்கிறது.எளிமையாக இருந்ததுகார்த்திகா, விக்னேஷ்வரா மெட்ரிக் பள்ளி, அங்கலகுறிச்சி: தமிழ் தேர்வு மிக சுலபமாக இருந்தது. புத்தகதில் இருந்து கேட்கப்பட்ட சில வினாக்களுக்கும் எளிதாக இருந்தது. திருப்புதல் தேர்வுகளால், பொதுத்தேர்வில் எவ்வித பதட்டமும் இல்லாமல், எழுத முடிந்தது. முழு மதிப்பெண் கிடைக்கும். லலித்குமரன், சுவஸ்திக் பள்ளி, நெகமம்: தமிழ் வினாத்தாள் மிக எளிமையாக இருந் தது. திருப்புதல் செய்த கேள்விகளே அதிகம் இடம் பெற்றன. ஒரு மதிப்பெண், கடித வினாக்கள் சிந்தித்து எழுதும் வகையில் இருந்தது. அதிக மதிப்பெண் கிடைக்கும். தனுஷ்மதி, ரைஸ் மெட்ரிக் பள்ளி, சாமியாண்டிபுதுார்: தமிழ் தேர்வு எதிர்பார்த்ததை விட மிக எளிமையாக இருந்தது. தெரிந்த வினாக்களே இடம் பெற்றதால் வினாத்தாளை பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்ததுடன், நம்பிக்கையும் ஏற்பட்டது. அதிக மதிப்பெண் பெற முடியும். மிருதுளா, கேசவ் வித்யா மெட்ரிக் பள்ளி, பொள்ளாச்சி: தமிழ் தேர்வு எளிமையாக இருந்தது. சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுவதில் இரண்டு வினாக்கள் சற்று சிந்தித்து எழுதும்படி இருந்தன. பள்ளியில் பல திருப்புதல் தேர்வுகள் நடத்தியதால் பொது தேர்வினை எளிதாக கையாள முடிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்