உள்ளூர் செய்திகள்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வு துவங்கியது

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வுகள் 15ம் தேதி தென்காசி எம்.கே.வி.கே.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் துவங்கியது. தென்காசியில் சேர்க்கை பெற்ற மாணவ, மாணவிகள் இம்மையத்தில் தேர்வு எழுதுகின்றனர். முதுநிலை பட்ட படிப்புகள் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் 1 மணி வரையும், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மாலை 2 மணி முதல் 5 மணி வரையும் தேர்வு நடக்கிறது. இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு தமிழ் நேற்றும், ஆங்கிலம் 17ம் தேதியும், இளங்கலை இரண்டாம் ஆண்டு தமிழ் 16ம் தேதியும், ஆங்கிலம் 18ம் தேதியும் நடக்கிறது. இதனை தொடர்ந்து மற்ற பாட தேர்வுகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்