உள்ளூர் செய்திகள்

பி.காம்., பி.எஸ்சி. கணிதம் படிக்க ஆர்வம்

சென்னையில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க விண்ணப்பம் வாங்க மாணவ-மாணவிகள் கூட்டம் அலை மோதுகிறது. பி.காம். மற்றும் பி.எஸ்சி. கணிதம் படிக்க மாணவர்களிடையே அதிக ஆர்வம் இருக்கிறது. சென்னையில் கடந்த 2-ந்தேதி முதல் பல கல்லூரிகளில் விண்ணப்பம் கொடுக்கும் பணி தொடங்கியது. மாணவ-மாணவிகள் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு சென்று விண்ணப்பங்களை வாங்கி வருகின்றனர். சிலர் விண்ணப்ப படிவங்களை அங்கேயே பூர்த்தி செய்து கல்லூரியில் ஒப்படைத்து விடுகின்றனர். மாணவர்களில் பலர் பி.காம். படிக்க விரும்புவதாக தெரிவித்தனர். சில மாணவிகள் விஷுவல் கம்யூனிகேசன் படிக்க விரும்புதாக தெரிவித்தனர். கல்லூரிச்சாலையில் உள்ள பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி, கதீட்ரல் சாலையில் உள்ள ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரி, கடற்கரை சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரி, நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.ஓ.பி.வைஷ்ணவ மகளிர் கல்லூரி, கடற்கரை சாலையில் உள்ள மாநில கல்லூரி மற்றும்  சென்னையில் உள்ள அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளிலும் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் சென்று விண்ணப்ப படிவங்களை பெற்றுச் செல்கின்றனர். 10 வேலை நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் 25-ந்தேதி பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் பெற்ற நாளில் இருந்து 10 வேலை நாட்களுக்குள் அதை மாணவ-மாணவிகள் கல்லூரிகளில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசு கல்லூரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டன. தனியார் கல்லூரிகளில் விரைவில் சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொண்டனர். அரசு கல்லூரிகளிலும் தனியார் கல்லூரிகளிலும் பி.காம். படிக்கத்தான் அதிக மாணவ-மாணவிகள் விருப்பம் தெரிவிக்கின்றனர். அடுத்தபடியாக பி.எஸ்சி. கணிதம் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கவும் ஆர்வம் இருப்பதாக சொல்கிறார்கள். .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்