உள்ளூர் செய்திகள்

காரைக்குடியில் இளம் விஞ்ஞானி தகுதி தேர்வு

காரைக்குடியில் நேற்று நடந்த இளம் விஞ்ஞானி தகுதிக்கான போட்டி தேர்வை, 4.390 பேர் எழுதினர். மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் சார்பில் நடந்த இத்தேர்வை எழுதுவதற்காக, மதுரை, நெல்லை, திருச்சி, கரூர், சிவகங்கை உட்பட தென் மாவட்ட அளவில் 5,816 பேர் ஹால்டிக்கெட் பெற்றனர். காரைக்குடியில், சிக்ரி ஆய்வு மையம், மகரிஷி வித்யா மந்திர், கேந்திரிய வித்யாலயா, கோட்டையூர் முத்தையா அழகப்பா, அழகப்பா அரசு பொறியியல் கல்லூரி, அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரி உட்பட 23 மையங்களில் தேர்வு நடந்தது. காலை 10 முதல் பகல் 1 மணி வரை நடந்த தேர்வை, 4,390 பேர் எழுதினர். டில்லி சி.எஸ்.ஐ.ஆர்., தேர்வு கண்காணிப்பாளர் சின்கா தலைமையில், சிக்ரி நிர்வாக கட்டுப்பாடு அதிகாரி மனுவேல் தாமஸ், மையங்களை கண்காணித்தனர். மூத்த விஞ்ஞானி பழனிச்சாமி கூறுகையில், இதில் வெற்றி பெறும் மாணவர்கள், மூன்று ஆண்டுகள் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ள மாதந்தோறும் 16,000 ரூபாய் கல்வி உதவித் தொகை கிடைக்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்