உள்ளூர் செய்திகள்

கவுன்சிலிங் குறித்த சின்ன சின்ன தகவல்கள்

* தகுதி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் கவுன்சிலிங்கில் பங்கு பெற அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து தனித்தனியாக தகவல் அனுப்பப்படும். * மாணவர்கள் அவர்களுடைய தர வரிசைப்படி கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்படுவர். இடம் இருப்பதைப் பொருத்து மாணவர்கள் விரும்பும் பாடப்பிரிவுகளைப் பெறலாம். * மாணவர்கள் விரும்பும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவை கோரலாம். ஆனால் அந்த நேரத்தில் இருக்கும் இடங்கள் அடிப்படையிலேயே ஒதுக்கீடு செய்யப்படும். * கவுன்சிலிங்கின்போது மாணவர்களுடைய மதிப்பெண்கள் சரிபார்க்கப்படும்; எனவே மாணவர்கள் தங்களுடைய ஒரிஜினல் மதிப்பெண் பட்டியலை கவுன்சிலிங்கிற்கு எடுத்து வர வேண்டும். * ஒரிஜினல் மதிப்பெண் பட்டியலைக் கொண்டுவர இயலாதவர்கள், அவர்களுடைய கல்வி நிறுவனத்திடமிருந்து அதற்கான கடிதத்தை வாங்கி வர வேண்டும்; அத்துடன் கல்வி நிறுவனத்தின் கையெழுத்திடப்பட்ட மதிப்பெண் பட்டியலின் ஜெராக்ஸ் பிரதியை கொண்டு வர வேண்டும். * குறிப்பிட்ட தேதியில் கவுன்சிலிங்கிற்கு வர இயலாதவர்கள், அதற்கு அடுத்த நாட்களில் பங்கு பெறலாம்; ஆனால், கவுன்சிலிங்கில் பங்கு பெறும் நாளன்று கிடைக்கும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளைத்தான் தேர்வு செய்ய இயலும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்