உள்ளூர் செய்திகள்

ஆங்கில பேச்சுத்திறன் பயிற்சி திருச்சியில் துவக்கம்

திருச்சி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் ஜூலை 1ம் தேதி தொடங்கும் ஆங்கில பேச்சுத்திறன் பயிற்சியில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்சி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய ஆங்கில பேச்சுத்திறன் பயிற்சி ஜூலை 1ம் தேதி தொடங்க உள்ளது. கிராமப்புறங்கில் உள்ள மாணவ, மாணவிகளும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச, எழுத வீட்டா கல்வி நிறுவனத்துடன் இணைந்து ஆங்கில பேச்சுத்திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் எழுத, படிக்க தெரிந்த அனைவரும் சேரலாம். தினமும் இரண்டு மணி நேரம் வீதம் 120 மணி நேரம் (அதிகபட்சமாக மூன்று மாதங்கள்) பயிற்சி அளிக்கப்படும். சனி, ஞாயிற்று கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படும். பயிற்சி கட்டணம் 2,500 ரூபாய். இப்பயிற்சி அடிப்படை பயிற்சி, இலக்கணம் மற்றும் பேச்சுத்திறன் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். விவரங்களுக்கு திருச்சி பழைய குட்ஷெட் ரோட்டில் உள்ள அமராவதி கூட்டுறவு சிறப்பு அங்காடி வளாகத்தில் உள்ள திருச்சி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை நேரிலும், 0431-2715748 என்ற ஃபோன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்