உள்ளூர் செய்திகள்

பொறியியல் கவுன்சிலிங் தேதி விவரங்கள் அறிவிப்பு

அதனைத் தொடர்ந்து தற்போது எந்தெந்த கட்-ஆப் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு, என்னென்ன தேதியில் கவுன்சிலிங் நடைபெறும் என்ற விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் சென்றால் அந்த விவரங்கள் அனைத்தும் முழு அளவில் கிடைக்கும். http://www.annauniv.edu/tnea2011/counschph1.pdf   மேலும், பிரிவுவாரியான தேதி விவரங்களும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. அந்த விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் விபரம்: 1. விளையாட்டு ஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 28 மற்றும் 29ம்(ஜுன்) தேதிகளில் நடைபெறுகிறது. 2. அதற்கடுத்து, விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் 30ம்(ஜுன்) தேதி நடக்கிறது. 3. தொழில்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஜுலை 1 முதல் 6ம் தேதி வரை 6 நாட்கள் நடக்கின்றன. 4. மாற்றுத் திறனாளிகளுக்கான கவுன்சிலிங் ஜுலை 7ம் தேதி நடக்கிறது. 5. இதனையடுத்து பொது கவுன்சிலிங் ஜுலை 8ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது.        


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்