உள்ளூர் செய்திகள்

மாணவ, மாணவியருக்கு இலவச பேருந்து பாஸ்

தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து பள்ளிகளிலும், அரசு கல்லூரிகளிலும் பயிலும் மாணவ, மாணவியருக்கு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் வழங்கப்படும் இலவச பேருந்து பாஸ் வழங்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. நடப்புக் கல்வியாண்டிற்கான இலவச பேருந்து பாஸ் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று துவக்கி வைத்தார். சென்னை மாநகரைச் சேர்ந்த 7 பள்ளிகளில் பயிலும் 7 மாணவ, மாணவிகளுக்கு அவர் இலவச பேருந்து பாஸ் வழங்கினார். தமிழ்நாடு முழுவதும் சுமார் 27.2 லட்சம் மாணவ, மாணவியர்கள் இச்சலுகையின் பெறுகிறார்கள். இதற்காக 303 கோடியே 84 லட்சம் ரூபாய் செலவாகும் என்று அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு குழந்தைகள் காப்பாகம் மற்றும் அரசு சேவை இல்லங்களில் தங்கி பயின்றவர்களில் பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்து சாதனை படைத்த மாணவிகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா பரிசுத் தொகை வழங்கி பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்