உள்ளூர் செய்திகள்

மனதில் மட்டும் கோட்டை கட்டினால் போதாது...

பொதுவாக, போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் கடைசி தேதிக்கு சற்று முன்பாக அவசர அவசரமாக விண்ணப்பத்தை அனுப்புகின்றனர். அடுத்து ஹால் டிக்கெட் வந்த பின்னர்தான் அது தொடர்பாக படிக்க முயற்சி செய்கின்றனர். இன்றைய போட்டிமிக்க உலகுக்கு இது சரிவராது. மேற்படிப்புக்குரிய நுழைவுத் தேர்வாக இருந்தாலும் சரி, வேலைவாய்ப்புக்குரிய தேர்வுகளாக இருந்தாலும் சரி. வெற்றி என்பது திட்டமிட்டுக் கொள்பவர்களுக்கே சாதகமாக அமைகிறது. ஒரு குறிப்பிட்ட தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்றால், ஆண்டு தோறும் அந்த தேர்வு எப்போது நடக்கிறது. அதற்கு முன்பாக குறைந்தபட்சம் எவ்வளவு தயாராக வேண்டும். தற்போதுள்ள வேலைகளுக்கு இடையில் இதற்காக எவ்வளவு நேரம் ஒதுக்குவது என்று ஏராளமான விஷயங்களை கருத்தில் கொண்டே நீங்கள் அந்த தேர்வு குறித்து முடிவு எடுக்க முடியும். சுயமாக படிப்பது சரியா... பயிற்சி மையத்துக்கு செல்வது அவசியமா உள்ளிட்ட விஷயங்களை நன்கு கருத்தில் கொண்டே தயார் செய்ய வேண்டும். பழைய கேள்வித்தாள்களை பயிற்சிக்கு எடுத்துக் கொள்வது, ஏற்கனவே இந்த தேர்வை எழுதியோரிடமும் அத்தேர்வில் வெற்றி பெற்றோரிடமும் அனுபவங்களை பகிர்ந்து கொள்வது உள்ளிட்ட விஷயங்கள் மிகவும் அத்தியாவசியமானவை. விண்ணப்பத்துடன் கைகளுக்கு கிடைக்கும் விளக்க குறிப்புகள் மட்டுமே உங்களுக்கு போதுமான தகவல்களை அளிக்காது. ஆகவே தேர்வு தொடர்பான அத்தனை விபரங்களையும் அறிந்து கொள்வது அவசியம். விண்ணப்பங்களை அனுப்பிவிட்டு, நாம் தேர்வாகிவிடுவோம் என்று மனதில் கோட்டை கட்டுவது வெற்றிக்கு உதவாது என்பதை கருதி உழையுங்கள். வாழ்த்துக்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்