கல்லூரிகளுக்கு ஆற்றல்சார் கல்லூரி அந்தஸ்து
கோவை:பாரதியார் பல்கலையின் கீழ் உள்ள மூன்று கல்லூரிகளை தேசிய அளவில் ஆற்றல்சார் கல்லூரிகளாக பல்கலை மானியக்குழு தேர்வு செய்துள்ளது. இந்த ஆண்டு யு.ஜி.சி.,யின் நிபுணர் குழுவினர் தேசிய அளவில் மொத்தம் 50 கல்லூரிகளை ஆற்றல்சார் கல்லூரி அந்தஸ்துக்கு பரிந்துரை செய்தனர். இதில், கோவை பாரதியார் பல்கலையின் கீழ் செயல்படும் கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, ஈரோடு வெள்ளாளர் மகளிர் கல்லூரி ஆகிய மூன்று கல்லூரிகளும் இடம் பெற்றுள்ளன. இத்தகவலை, பாரதியார் பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன் தெரிவித்தார்.