இந்திய கப்பல் படைக்கு ஆள் சேர்ப்பு
இது குறித்து பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை ராஜாஜி சாலை, நேப்பியர் பாலம் அருகில் உள்ள ஐ.என்.எஸ். அடையாறு என்ற முகவரியில் தேர்வு நடைபெறுகிறது. பங்கேற்க விரும்புவோர் 10ம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான தொழில் படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கம்ப்யூட்டர் அறிவியல் பாடங்களை படித்திருக்க வேண்டும். 1991 ஜனவரி 31 முதல் 1995 ஜனவரி 30ம் தேதிக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். உடல் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவோர், 10ம் வகுப்பு மெட்ரிக்குலேஷன் அல்லது அதற்கு நிகரான சான்றிதழ்களுடன் என்.சி.சி. சான்று, வயது சான்று, நன்னடத்தை சான்று, விளையாட்டு சான்று ஆகியவற்றையும் இணைக்க வேண்டும். தேர்வுக்கான பாட ஒழுங்கு விதிமுறைகளை என்ற இணையதள முகவரியிலோ அலுவலகத்தில் நேரில் சென்றோ தெரிந்து கொள்ளலாம்.