உள்ளூர் செய்திகள்

மொழியை பாதுகாக்க வேண்டியது இளைஞர் கடமை

திருச்செங்கோடு செங்குந்தர் கலை அறிவியல் கல்லூரியின், 20வது ஆண்டு மாணவர் பேரவை மற்றும் தமிழ் பேரவை துவக்க விழா நடந்தது. காந்திய மக்கள் இயக்கத் தலைவரும், இலக்கியச் சொற்பொழிவாளருமான தமிழருவி மணியன் பங்கேற்று பேசியதாவது: "நமது முன்னோர்களின் வாழ்க்கையை உணர்ந்து கொள்ள, தாய்மொழி அறிவு அவசியம். தாயும், தாய் மொழியும் போற்றுதலுக்கு உரியது. தமிழ் படிப்பதையும், தமிழ் மொழியில் பேசுவதையும் அவமானமாக கருதும் இளைஞர்கள் உருவாவது தமிழ் மொழியின் வீழ்ச்சிக்கு காரணமாகி விடும். உலகில், 6,000 மொழிகள் வழக்கத்தில் உள்ளது. அதில், ஆறு மொழிகள்தான் செம்மொழி தகுதியுடயவையாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. உலகத்தின் சிறந்த மொழிகள் என கருதப்பட்ட லத்தீன், கிரேக்கம், ஹீப்ரூ, சமஸ்கிருதம் போன்ற மொழிகள் அழிந்து விட்டன. தமிழும், சீனமும் இன்றும் உயிர்ப்போடு உள்ளன. இன்னும் சில ஆண்டுகளில், தமிழும் அழிந்துபோகும் நிலை உருவாகி வருகிறது. நாம் என்பதை உலகிற்கு அடையாளம் காட்டும் மொழியை பாதுகாக்க வேண்டியது இளைஞர்களின் கடமை. பிழைப்புக்காக எந்த மொழியை வேண்டுமானாலும் கற்கலாம். ஆனால் தாய்மொழியை விட்டு விடக்கூடாது. தாய்மொழியில்தான் சிந்திக்க முடியம். சிந்தனைதான் படைப்பற்றலை உருவாக்கும். உயிர், மெய், உயிர் மெய் என மொழியின் அடிப்படையை கொண்ட அம்மா, அப்பா என்று வழக்கம் மாறி, மாம், டேட் என அழைக்கும் நிலை வந்துள்ளது. பயிற்சியும், முயற்சியும் இருந்தால் தான் மொழியை வசப்படுத்த முடியும். தாயின் கருவரையில் நான் கேட்ட தமிழ்மொழி மற்றவர் பேசி கேட்க பேச்சு மொழியாகும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்