உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகளை பள்ளியில் சேர்ப்பது குறித்து விழிப்புணர்வு

ராசிபுரம்: அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், சர்வீஸ் தொண்டு நிறுனத்துடன் இணைந்து, மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவியர்களை பள்ளியில் சேர்ப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி, ராசிபுரத்தில் நடந்தது. பேரணியில், மாற்றுதிறனுடைய மாணவர்களை பள்ளியில் சேர்ப்பது குறித்தும், அவர்களுக்கு அரசு வழங்கக்கூடிய சலுகைகள், நலத்திட்டங்கள் பற்றியும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், சிறப்பாசிரியர்கள் ஸ்ரீதேவி, பிரேமா, இந்திராணி, மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர். அதேபோல், அங்கன்வாடி பணியாளர்களுக்கு மாற்றுதிறனாளிகளை பள்ளியில் சேர்ப்பது குறித்து விழிப்புணர்வு பயிற்சியும் அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்