உள்ளூர் செய்திகள்

பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம்

தமிகத்தில் 1,743 இடை நிலை ஆசிரியர்கள் உடனடியாக நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வர உள்ளது. அறிவிப்பு வெளியானதும், பணிக்காக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். அதில் அவர்களின் முகவரி, கல்வித் தகுதி, வேலை வாய்ப்பு பதிவு மூப்பு ஆகியவை குறிப்பிட வேண்டும். அதோடு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பதிவு மூப்பு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் பெறும். இவை இரண்டும் சரிபார்க்கப்பட்டு இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விரைவாக இப்பணிகள் நடைபெற்று புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.  இந்த இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நடைபெற உள்ளது. மாவட்ட பதிவு மூப்பு அடிப்படையில் அல்ல. எனவே, ஆசிரியர்கள் தேர்வு செய்த பின்னர்தான் தமிழகத்தில் உள்ள பள்ளி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. பொதுவாக, வேலை வாய்ப்பு அலுவலகங்களில் இருந்து வரும் பதிவு மூப்பு பட்டியல் முழுமையானதாக இருப்பதில்லை. பல பெயர்கள் விடுபட்டு போயிருக்கும். பின்னர் விடுபட்டவர்களின் பட்டியல் என தனியாக ஒன்றையும் வேலை வாய்ப்பு அலுவலகம் அனுப்பும். இதற்குள் பெயர் விடுபட்டுப் போனவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு வந்து முறையிடுவார்கள். இப்பிரச்சினையைத் தவிர்க்க, கிண்டியில் உள்ள வேலை வாய்ப்பு இயக்குநர் அலுவலகம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் இருந்து சரியான பதிவு மூப்பு பட்டியலை ஒரு முறைக்கு இரு முறை சரிபார்த்து அதன்பின்னர் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பினால் கால தாமதமும், பிரச்சினைகளும் தவிர்க்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்