உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு சென்னையில் சிறப்பு நிகழ்ச்சி

சென்னை: சென்னை மயிலாப்பூர் ‘பிளிட்ஸ்’ அமைப்பு சார்பில், மனவளர்ச்சி குறைந்த குழந்தைகளுக்கான சிறப்பு விழா சென்னையில் நடந்தது. விழாவில், ஸ்பாஸ்டிக் சொசைட்டி ஆப் தமிழ்நாடு, ஸ்பாஸ்டிக் சொசைட்டி ஆப் இந்தியா (வித்யாசாகர்), ஐக்யா, ரசா உட்பட ஒன்பது அமைப்புகளின் பராமரிப்பில் உள்ள மூளை வளர்ச்சி குன்றிய, உடல் ஊனமுற்ற 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர். விழாவை ஒட்டி, இந்த குழந்தைகளுக்கான ஓவியம், கட்டுரை, வினாடி-வினா உட்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. சிறப்பு குழந்தைகளுக்கான பல் சிகிச்சை முகாம்,  விளையாட்டு அரங்குகள், மனவளர்ச்சி குறைந்த குழந்தைகள் தயாரித்த பொம்மைகள், மெழுகுவர்த்திகள், ஓவியங்கள் உள்ளிட்டவை விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன. விழாவில், ‘பிளிட்ஸ்’ நிறுவனத் தலைவர் சந்தீப், செயலர் சந்தியா விஸ்வநாதன், பொருளாளர் கார்த்திக், வக்கீல் ஷியாம் சுந்தர் உட்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில், சிறப்பு குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்