உள்ளூர் செய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கலைத்திறன் போட்டி

கவிதை போட்டி காலை 10 மணி முதல் 11.30 மணி வரை நடக்கிறது. கட்டுரைப் போட்டி பகல் 12 மணி முதல் பகல் 1.30 மணி வரை நடக்கிறது. பேச்சு போட்டி மதியம் 2.30 மணிக்கு துவங்குகிறது. விதிமுறை: அந்தந்த மாவட்டத்திலுள்ள கலைக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவம், கால்நடை மருத்துவக் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், பல் தொழில்நுட்பக் கல்லூரிகள், பிற கல்லூரிகளில் பியலும் மாணவ, மாணவியர்கள் இப்போட்டியில் பங்கேற்கலாம். அனைத்து மாணவர்களுக்கும் போட்டி பொதுவானது. ஒவ்வொரு கல்லூரி, பள்ளிகளிலிருந்தும் ஒரு போட்டிக்கு ஒரு மாணவர் வீதம் 3 பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம். இவர்களை கல்லூரி நிர்வாகம் தேர்வு செய்து அனுப்ப வேண்டும். போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள், பற்றிய விபரத்தை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து, மாணவரே பள்ளி தலைமை ஆசிரியர், கல்லூரி முதல்வரிடமிருந்து பெற்று போட்டி நடப்பதற்கு முன்னதாக தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனரிடம் தரவேண்டும். மூன்று போட்டிகளில் ஒரு மாணவரே கலந்து கொள்ளலாம். மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகளில் பரிசு பெற்றவர்கள் மாநில அளவில் சென்னையில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொள்ளலாம். மாநில அளவிலான போட்டிக்கான இடம், நாள், நேரம் தமிழ் வளர்ச்சித்துறையில் இருந்து பின்னர் அறிவிக்கப்படும். சிறந்த கவிதைக்கு, முதல் பரிசு ரூபாய் 10 ஆயிரம், 2ம் பரிசு ரூபாய் 7 ஆயிரம். கட்டுரைக்கு, முதல் பரிசு ரூபாய் 10 ஆயிரம், 2வது பரிசு ரூபாய் 7 ஆயிரம். பேச்சுப் போட்டிக்கு, முதல் பரிசு ரூபாய் 10 ஆயிரம், 2வது பரிசு ரூபாய் 7 ஆயிரம் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்