உள்ளூர் செய்திகள்

பொருளாதார மந்த நிலையால் கவலையுறும் மாணவர்கள்

லேமென் பிரதர்ஸ் நிறுவனத்தின் வீழ்ச்சியும், உலகையே புரட்டிப் போட்டுள்ள பொருளாதார மந்த நிலையின் உலகளாவிய வீச்சும் இந்திய மாணவர்களையும் மன அழுத்தங்களுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்தியாவின் தலை சிறந்த கல்வி நிறுவனங்களுள் ஒன்றான ஐ.ஐ.எம்., ஆமதாபாத்தின் மாணவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. சமீபத்தில் இக்கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற பணி வாய்ப்பு முகாமில் இதன் தாக்கம் நன்றாகவே தெரிந்தது. உலக அளவிலான பொருளாதார நிதி நெருக்கடி ஐ.ஐ.எம்., நிர்வாகவியல் மாணவர்களுக்கான பணி வாய்ப்புகளை பெருமளவில் குறைத்துள்ளது. பணி வாய்ப்பு குறைவு, திருப்தியில்லாத சம்பள விகிதங்கள், பெரிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் வீழ்ச்சி போன்ற காரணங்கள் மன அழுத்தத்தைத் தருவதோடு எதிர்காலம் பற்றிய நம்பிக்கையையும் பாதித்துள்ளது என்றே கூறலாம். ஐ.ஐ.எம்., மாணவர்களுக்கு வேலை ஒரு பிரச்னை இல்லை என்ற போதிலும் விண்ணை எட்டும் சம்பளங்கள் கனவாகவே மாறிவிடுமோ என்றும் இந்த மாணவர்கள் பயப்படுகின்றனர். பணி வாய்ப்புகள் சீராகவே இருந்து வருகின்றன என்றாலும் பணிக்கான முன் மொழிவுகள் குறைந்திருப்பதே மாணவர்களை அச்சமுறச் செய்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்