உள்ளூர் செய்திகள்

காலாண்டு விடு­முறை: சுற்­றுலா மையங்­களில் கூட்டம்

திருப்­போரூர்: பள்­ளி­க­ளுக்கு, காலாண்டு விடு­முறை அறி­விக்­கப்­பட்டு உள்­ளதால், கோவளம் கடற்­கரை மற்றும் முட்­டுக்­காடு படகு குழாமில், சுற்­றுலா பய­ணிகள் வரத்து அதி­க­ரித்து உள்­ளது. கோவ­ளத்தில், இயற்கை எழில் நிறைந்த கடற்­கரை உள்­ளது. இங்கு, விடு­முறை தினங்கள் மற்றும் இந்து, முஸ்லிம், கிறிஸ்­துவ பண்­டிகை நாட்­களில், ஆயி­ரக்­க­ணக்­கானோர் வந்து செல்­கின்­றனர். பள்­ளி­களில், காலாண்டு விடு­முறை அறி­விக்­கப்­பட்டு உள்­ளதால், கோவளம் கடற்­க­ரையில் கூட்டம் அதி­க­ரித்து உள்­ளது. பய­ணிகள் கடற்­கரை ஓரம் நின்று அலையில் குளித்து மகிழ்ந்­தனர். முட்­டுக்­காடு சுற்­றுலா கழக படகு குழாமில், துடுப்பு படகு, மோட்டார் பட­கு­களில் பய­ணிக்க, நூற்­றுக்­க­ணக்கில் சுற்­றுலா பய­ணிகள் கூட்டம் அதி­க­ரித்து உள்­ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்